உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேசிய அளவிலான கருத்தரங்கு

தேசிய அளவிலான கருத்தரங்கு

ஈரோடு: கோபி, ஒத்தக்குதிரையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லுாரியில், டி.ஆர்.டி.ஓ., நிதியுதவியுடன் பாதுகாப்பு துறையில், பயன்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பத்தில், நானோ மெட்டீரியல்களின் உபயோகங்கள் குறித்த, தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது.சிறப்பு விருந்தினராக பட்னாக்கர் விருது பெற்ற விஞ்ஞானியும் (எப்), டி.ஆர்.டி.ஓ., துணை இயக்குனரும், தொழிற்பிரிவு கல்வி மையம், பாரதியார் பல்கலை முனைவருமான கதிர்வேலு, கோவை நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மூத்த இணை பேராசிரியர் கிருஷ்ணகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் பிற கல்லுாரிகளை சார்ந்த, 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.கல்லுாரி முதல்வர் தங்கவேல் தலைமை வகித்தார். கல்லுாரி டீன் (ஆர்&டி) அருண்ராஜா, துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் இயந்திரவியல் துறை உதவி பேராசிரியர் நிர்மல் குமார் ஆகியோர், கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை