உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில் மோதி மூதாட்டி பலி

ரயில் மோதி மூதாட்டி பலி

ஈரோடு : கொடுமுடி-புகளூர் இடையே தண்டவாள பகுதியில், ரயில் மோதி மூதாட்டி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.ஈரோடு ரயில்வே போலீசார், இறந்த மூதாட்டி யின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்தது சென்னசமுத்திரம், வருந்தியாபாளையம் புதுார் கோவில் வீதியை சேர்ந்த கருப்பண்ணன் மனைவி கருப்பாயம்மாள், 85, என்பதும், இயற்கை உபாதை கழிக்க தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது, அவ்வழியே வந்த ரயில் மோதி இறந்தது தெரியவந்தது. காது கேட்காதவரான கருப்பாயம்மாளின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை