உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயத்தில் போராட்டத்தால் மதுக்கடை இடமாற்றம் நிறுத்தம்

காங்கேயத்தில் போராட்டத்தால் மதுக்கடை இடமாற்றம் நிறுத்தம்

காங்கேயம்: காங்கேயம்-சென்னிமலை சாலை, நெய்க்காரன்பாளையத்தில், அரசு டாஸ்மாக் மதுக்கடை (எண்:3618) செயல்படுகிறது. கடையை கரூர் சாலையில், நகரப்பகுதியில் அமைக்க இடம் தேர்வு செய்தனர். இதற்காக நேற்று முன்தினம் இரவு பழைய கடையில் இருந்து சரக்குகளை, புது கடை அமையவுள்ள இடத்துக்கு கொண்டு சென்றனர். நேற்று மதியம் கடை திறப்பதாக இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கேயம் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் பேச்சுவார்த்தை நடத்தினர். திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு வரும் வரை கடை திறக்கப்படாது என்று தெரிவித்தார். இதனால் மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதேசமயம் தி.மு.க., தரப்பில் சிலர், அப்பகுதியில் கடை திறந்தாக வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி