உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் நவீன வசதிகளுடன் இயங்கும் சுதா கேன்சர் சென்டர்

ஈரோட்டில் நவீன வசதிகளுடன் இயங்கும் சுதா கேன்சர் சென்டர்

ஈரோடு: ஈரோடு பெருந்துறை சாலையில், சுதா பல்நோக்கு மருத்துவமனை பின்புறம் சுதா கேன்சர் சென்டர் மருத்துவமனை உள்ளது.இங்கு ஒருங்கிணைந்த புற்று நோய் சிகிச்சை மையம், புற்றுநோயை துல்லியமாக கண்டறியும் அதிநவீன பெட்-சிடி ஸ்கேன், ஆசியாவின் முதல் 6டி ட்ருபீம் டர்போ லீனியர் ஆக்சிலேட்டர் எஸ்டிஎக்ஸ், அதிநவீன எம்ஆர் தொழில்நுட்ப வசதி கொண்ட உள் கதிர்வீச்சு சிகிச்சை, 24 மணி நேர புற்றுநோய்க்கான அவசர சிகிச்சை வசதி, தனி மருந்தகம், லேப் ஆகியவற்றுடன் இயங்கி வருகிறது.இந்தியாவின் மிகச்சிறந்த புற்றுநோய் மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவ நிபுணர்கள், ஈரோடு சுதா கேன்சர் சென்டரில் பணிக்கு சேர்ந்துள்ளனர். இதன்படி மருத்துவம், கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை நிபுணராக டாக்டர் சுகேஸ்வரன் (கித்வாய் மருத்துவமனை -பெங்களூரு) தலைமையில், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணராக டாக்டர்கள் மணிகண்டன் (அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்-), ரூபக் விசாகன் ராஜா (டாடா மெமோரியல் மருத்துவமனை- மும்பை), புற்று நோய் மருந்தியல் நிபுணர் டாக்டர் நிர்மல் அரசு (மேக்ஸ் மருத்துவமனை- புது டெல்லி), அணுக்கரு கதிரியிக்க நிபுணர் டாக்டர் பிரதாப் (ஜிப்மர் மருத்துவமனை- புதுச்சேரி), கதிரியிக்க நிபுணர் டாக்டர் பிரபாகரன் (செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனை- பெங்களூரு) ஆகியோர் கொண்ட மருத்துவர் குழு பொறுப்பேற்று சிகிச்சை வழங்கி வருகின்றனர். மேலும் விபரம் பெற, 0424 3514545, 2454545, 70944 70073 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை