உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உதயகிரி முத்து வேலாயுத சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம்

உதயகிரி முத்து வேலாயுத சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம்

நம்பியூர்: நம்பியூர் அருகே மலையப்பாளையம், உதயகிரி முத்து வேலாயுத சுவாமி கோவிலில், தைப்பூச தேரோட்டம் நேற்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு நுாற்றக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர்.விழாவையொட்டி நுாற்றுக்கணக்கான பக்தர்கள், பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தேரோட்டத்துக்கு முன்னதாக மூலவருக்கு சிறப்பு பூஜை மற்றும் ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. நம்பியூர், மலையப்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில், 12 கிராமங்களை சேர்ந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், விழாவில் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் பல்வேறு காவடி சுமந்து, ஊர்வலமாக வந்து, சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ