உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாடும் மல்லிகை; விவசாயிகள் கவலை

வாடும் மல்லிகை; விவசாயிகள் கவலை

ஈரோடு : ஈரோடு, வெண்டிபாளையம் பகுதியில், முதன்மை விவசாயமாக நெல் பயிரிடப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கரும்பு, காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. மல்லிகை, ரோஜா, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட மலர் வகைகளும் கணிசமான அளவில் பயிரிடப்படுகின்றன. இதில் வெண்டிபாளையம் காவிரி ஆற்றின் கரையோரத்தில், அதிகளவில் மலர் விவசாயம் நடகிறது. சிறு, குறு விவசாயிகள் அதிகம் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர். ஒரு மாதத்துக்கு மேலாக, அதிக வெயில் மற்றும் போதிய நீரின்றி, மல்லிகை மொட்டுகள் கருகி விட்டன. மேலும் செடிகள் காய்ந்து சருகாகி வருவதால், விவசாயிகள் வேதனை அடைந்து இருக்கின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: வெயில் கொளுத்தி வருவதால், போதிய நீரின்றி மல்லிகை மொட்டுகள் அனைத்தும் கருகி விட்டன. சாகுபடி செய்த செலவே கிடைக்காத நிலையே உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ