உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாலையில் மரக்கிளை முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

சாலையில் மரக்கிளை முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கள்ளக்குறிச்சி, விருகாவூர் கிராமத்தில் சாலையோர அரசு மரக்கிளை முறிந்து விழுந்ததில் கூத்தக்குடி சாலையில் போக்குவரத்து பாதித்தது.கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூர் கிராமத்தில் பாஞ்சாலி அம்மன் கோவிலில் 100 ஆண்டு பழமை வாய்ந்த அரசமரம் உள்ளது. கூத்தக்குடி சாலையோரம் அரசு பெண்கள் பள்ளியை ஒட்டியபடி உள்ள இந்த மர நிழலில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வெயில் நேரத்தில் இளைப்பாறுவது வழக்கம். இந்த மரத்தின் கிளை நேற்று மாலை 5:15 மணிக்கு திடீரென முறிந்து விழுந்தது. அப்போது அதன் கீழ் நிறுத்தியிருந்த வேன் மற்றும் கார் மற்றும் இரு வாகனங்களும் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மரக்கிளைகளை அகற்றினர். இதனால், 6;15 மணி வரை ஒரு மணிநேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை