| ADDED : ஆக 18, 2024 04:51 AM
மூங்கில்துறைப்பட்டு : ங்கில்துறைப்பட்டு அருகே மலைப்பாதையை பாறாங்கல் போட்டு அடைத்த தனி நபரை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொரசப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பெருவலுார் எல்லையில் மலைக்குன்று உள்ளது. மலைக்குன்றைச் சுற்றி 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.மேலும், 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், அன்றாடம் விவசாயத்திற்கு செல்ல மலையடி பாதையின் வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆனால், பாதையினை நேற்று தனி நபர் பெரிய பாறாங்கற்களை வைத்து அடைத்துள்ளனர்.இதனால், அந்த வழியாக செல்ல முடியாததால் அப்பகுதி மக்கள் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் முருகன் ஜே.சி.பி., மூலம் பாறாங்கற்களை அகற்றினார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.