உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து சின்னசேலத்தில் கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து சின்னசேலத்தில் கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும், அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார். சின்னசேலம் வட்டார பகுதிகளில் அரசின் பல்வேறு துறைகளின் கீழ் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இப்பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார். பூண்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 13.32 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏரி புனரமைக்கும் பணி. அம்மையகரத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான எரிவாயு தகன மேடை கட்டுமான பணி மற்றும் நைனார்பாளையத்தில் நெகிழி கழிவு மேலாண்மை கூடத்தில் நெகிழிவுகள் மறுசுழ்சி செய்யப்படுவது குறித்தும் ஆய்வு செய்தார்.பின், சின்னசேலம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் இலங்கை தமிழர்களுக்காக 5 கோடியே 7 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் 88 வீடுகளின் கட்டுமான பணிகளின் முன்னேற்ற நிலைகள் குறித்து ஆய்வு செய்து, குடியிருப்பு பகுதிகளில் சாலை மற்றும் மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், ரேஷன் கடையில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு நிலை, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொருட்களின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து சின்னசேலம் பஸ் நிலையத்தை பார்வையிட்டு விரிவாக்கம், சாலை அகல்படுத்துதல், பயணியர் நிழற்குடை அமைப்பது தொடர்பாக கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். பின்னர், ஒரு கோடியே 44 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் கள்ளக்குறிச்சி - ஏர்வாய்ப்பட்டினம் புதிய தார்சாலையில், குழி தோண்டி சாலை பணிக்கு போடப்பட்ட ஜல்லி, ஜல்லி கலவை பொருட்களின் அளவைகள், எடை மற்றும் கொள்ளளவு குறித்து ஆய்வு செய்தார்.ஆய்வின்போது பி.டி.ஓ.,க்கள் ரவிசங்கர், செந்தில்முருகன், தாசில்தார் கமலக்கண்ணன், பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ், துணை சேர்மன் ராகேஷ், செயல் அலுவலர் மோகனரங்கன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை