உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிலம்பம் போட்டி: மாணவிகள் சாதனை

சிலம்பம் போட்டி: மாணவிகள் சாதனை

சங்கராபுரம், : புதுச்சேரியில் நடந்த சர்வதேச சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டியில் சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவிகள் தங்கள்,வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.புதுச்சேரியில் கடந்த 4ம் தேதி சர்வதேச சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி நடந்தது. இதில் கத்தார், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.இந்தியா சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவிகள் ஹரிஷ்மா, சுவேதா, ஜெரோஸ்லின், சரிகாஸ்ரீ பங்கேற்றனர்.இதில் ஹரிஷ்மா தங்கம், சுவேதா வெள்ளி, ஜெரோஸ்லின் வெள்ளி, சரிகா ஸ்ரீ வெண்கல பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர். பதக்கம் வென்றவர்களை கள்ளக்குறிச்சி மாவட்ட பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கழகத் தலைவர் சுதாகரன், கள்ளக்குறிச்சி மாவட்ட கயிறு தாண்டுதல் சங்கத் தலைவர் குசேலன், பயிற்சியாளர் சூரியமுர்த்தி ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை