உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அகில உலக கிருஷ்ணா பாகவத யாத்திரை

அகில உலக கிருஷ்ணா பாகவத யாத்திரை

சின்னசேலம் : சின்னசேலத்தில் அகில உலக கிருஷ்ணா பாகவத பக்தி ரத யாத்திரை இரண்டு நாள் நடக்கிறது.திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தொடங்கி அகில உலக கிருஷ்ணா பாகவத பக்தி ரத யாத்திரை தமிழ்நாடு முழுவதும் சுற்றி வருகிறது. அதன்படி நேற்று சின்னசேலம் வருகை புரிந்த பாகவத யாத்திரை குழுவினர் வாசவி மகாலில் இருந்து பலராமர் கிருஷ்ணர் சுவாமிகளுடன் பகவத் கீதை சாராம்சங்களை மக்களுக்கு எடுத்துரைத்து ரத யாத்திரையை விஜயபுரம் மற்றும் தேரோடும் வீதி வழியாக பவனி கொண்டு சென்றனர். உடன் ஹரி நல பஜனை குழுவினர் பாட்டு பாடி கீர்த்தனங்கள் பாடி முன் சென்றனர். சின்னசேலத்தில் இரு நாட்கள் யாத்திரை முடிந்தபின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் மூன்று நாட்கள் ரத யாத்திரை வலம் வரும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை