உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பணி ஓய்வு பெற்ற மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு

பணி ஓய்வு பெற்ற மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பணி ஓய்வு பெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் மாவட்டத்தில் பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி டி.இ.ஓ. அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநில தலைவர் தங்கமணி தலைமை தாங்கினார்.மாவட்ட கவுரவத் தலைவர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் தண்டபாணி வரவேற்றார். ஓய்வு பெற்ற டி.இ.ஓ., லுார்துசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.பணி ஓய்வு பெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சசி, ராமச்சந்திரன், சீனிவாசன், விஜயலட்சுமி, லுார்துசாமி ஆகியோர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் திருக்கோவிலுார்-ஜெயஸ்ரீ, குதிரைச்சந்தல், மணிமாறன், மூரார்பாது-வேலுச்சாமி, உளுந்துார்பேட்டை-சரஸ்வதி, பெருமங்கலம்-சங்கர், கச்சிராயபாளையம்-ராணி, உதவி திட்ட அலுவலர் பழனியாப்பிள்ளை உள்ளிட்டவர்கள் வாழ்த்துரை வழங்கினர். திருப்பாலப்பந்தல் தலைமை ஆசிரியர் அன்பழகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை