உள்ளூர் செய்திகள்

அறிவியல் மன்ற விழா 

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த வாணவரெட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்ற விழா நடந்தது.விழாவிற்கு தலைமை யாசிரியர் பாரதியார் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர்கள் சிங்காரவேலு, ஆனந்தராஜ் முன்னிலை வகித்தனர். அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசன் வரவேற்றார்.விழாவில் அறிவியல் மன்ற உறப்பினர்களான மாணவ, மாணவியர்கள் அறிவியல் சார்ந்த நாடகங்கள், விடுகதைகள், வினாடி வினா, அறிவியல் வளர்ச்சி சார்ந்த பாடல்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்த உரையாடல் நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர்கள் ஜீவா, பொன்முடி, மகேந்திரன், முருகன், ஏழுமலை வாழ்த்திப் பேசினர். ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை