மேலும் செய்திகள்
சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் சன்மார்க்க கொடிநாள் விழா
7 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
7 hour(s) ago
சாத்தனுார் அணைக்கான நீர்வரத்து சற்று உயர்ந்தது
7 hour(s) ago
திருக்கோவிலுார் : திருட்டு வழக்கில் குற்றவாளிக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருக்கோவிலுார் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார், சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் ஜெயக்குமார், 41; இவரது வீட்டில் இயங்கி வந்த இண்டேன் காஸ் ஏஜன்சி அலுவலகத்தில், கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி ரூ.1.32 லட்சம் ரூபாய் ரொக்கம், ஏ.டி.எம்., கார்டு, பாங்க் பாஸ் புத்தகம் மற்றும் சில ஆவணங்கள் திருடு போனது.இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.அதில், சந்தைப்பேட்டையை சேர்ந்த ரகுமான் பேக் மகன் கரிம் பேக், 44; என்பவர் இதில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை கைது செய்து, திருக்கோவிலுார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை முடிந்த நிலையில், மாஜிஸ்ட்ரேட் வெங்கடேஷ் குமார் நேற்று தீர்ப்பளித்தார்.அதில், குற்றம் சாட்டப்பட்ட கரிம் பேக்கிற்கு 3 ஆண்டு சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம், இதனை கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago