உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு... எப்போது? உளுந்துார்பேட்டையில் மக்கள் கடும் அவதி

போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு... எப்போது? உளுந்துார்பேட்டையில் மக்கள் கடும் அவதி

உளுந்துார்பேட்டை உளுந்துார்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள்கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.உளுந்துார்பேட்டை பகுதி சென்னை, சேலம், திருச்சி, மதுரை, வேலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் மைய பகுதியாக உள்ளது. இதனால் உளுந்துார்பேட்டை வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து சென்ற வண்ணம் இருப்பதால் வாகன போக்குவரத்து 24 மணி நேரமும் இருந்து கொண்டே இருக்கும். முக்கியத்துவம் வாய்ந்த உளுந்துார்பேட்டை பகுதியில் வாகனங்கள் எளிதில் செல்ல முடியாமல் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தினசரி அவதிப்பட்டு வருகின்றனர். பஸ் நிலையம் அருகே, சென்னை சாலை, திருவெண்ணெய்நல்லுார் சாலை, விருத்தாசலம் சாலை பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்புகள் ஒருபுறம் இருந்தாலும், கடைவீதிக்கு வருவோர் சாலையிலேயே வாகனங்களை நிறுத்துவதால் வாகனங்கள் செல்ல முடியாமல் திணறுகின்றன. போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த வேண்டிய போக்குவரத்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே போக்குவரத்து போலீசார் இருக்கின்றனர் மற்ற நேரங்களில் பொதுமக்களின் நிலையை கருத்தில் கொண்டு வியாபாரிகள், இளைஞர்கள் சிலர் அவர்களாகவே முன்வந்து போக்குவரத்தை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.காலை மற்றும் மாலை பள்ளி, கல்லுாரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம், போலீசார், நெடுஞ்சாலைத் துறையினர் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி