உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஜகா வாங்கும் அ.தி.மு.க., நிர்வாகிகள்; நானே களம் இறங்குவேன்: மா.செ., ஆவேசம்

ஜகா வாங்கும் அ.தி.மு.க., நிர்வாகிகள்; நானே களம் இறங்குவேன்: மா.செ., ஆவேசம்

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி உதயமான பின்பு நடந்த மூன்று தேர்தல்களிலும் தி.மு.க., நேரடியாக களம் கண்டு இரு முறை வெற்றி பெற்றுள்ளது. ஒருமுறை அ.தி.மு.க., வெற்றி பெற்றது. தற்போது நான்காவதாக முறையாக தி.மு.க., கூட்டணி பலத்துடன் போட்டியிட தயாராகி வருகிறது.கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் தலா மூன்று சட்டசபை தொகுதிகளை கொண்டுள்ளது. இதில் 4 சட்டசபை தொகுதிகள் அ.தி.மு.க., வசமும், 2 சட்டசபை தி.மு.க., வசமும் உள்ளது. இருப்பினும் தி.மு.க.,வில் 'சீட்' பெற்று போட்டியிட உடன்பிறப்புகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அ.தி.மு.க.,வில், பலர் விருப்ப மனு அளித்திருந்தாலும், கூட்டணி பலம் இல்லாததால் போட்டியிட தயக்கம் காட்டுகின்றனர். கட்சி தலைமை முக்கிய நிர்வாகிகளை போட்டியிடுமாறு வலியுறுத்தினால் 'ப' வசதி இல்லை என்ற காரணத்தை கூறி தட்டி கழிக்கின்றனர். தேர்தல் செலவுகள் முழுவதையும் கட்சி தலைமை ஏற்றுக் கொண்டால் நிற்க தயாராக இருப்பதாக கூறி நழுவிக் கொள்கின்றனர். இதனால் மாவட்ட செயலாளர் குமரகுரு, கூட்டணி கட்சிகளுக்கு கள்ளக்குறிச்சி தொகுதியை ஒதுக்காதபட்சத்தில் தானே நிற்கப்போவதாக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஆவேசத்துடன் கூறி வருகிறார். தற்போது அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.கூட்டணி உறுதியானால் தே.மு.தி.க., கள்ளக்குறிச்சி தொகுதியை கேட்டு பெறுவதற்கான சூழல் இருப்பதாக கூறப்படுகிறது.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை