மேலும் செய்திகள்
சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் சன்மார்க்க கொடிநாள் விழா
7 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
7 hour(s) ago
சாத்தனுார் அணைக்கான நீர்வரத்து சற்று உயர்ந்தது
7 hour(s) ago
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அருகே சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.ரிஷிவந்தியம் அடுத்த காட்டுசெல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி, 52; இவரது தம்பி ஏழுமலை, 47; இருவருக்கும் சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்தது. கடந்த 22ம் தேதி இவர்களது தந்தை சுப்ரமணியன் உடல் நலமின்றி இறந்தார்.ஏழுமலை வீட்டிலிருந்த சுப்ரமணியனின் உடலைப் பார்க்க ரகுபதி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்ற னர். அங்கு இரு குடும்பத்திற்குமிடையே தகராறு ஏற் பட்டு தாக்கிக் கொண்டனர்.இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில் ஏழுமலை, இவரது மனைவி ராஜவேணி, மகன்கள் கார்த்திகேயன், கதிரவன், ரகுபதி, இவரது மகன்கள் செல்வம், அய்யனார், மனைவி ஜெயா ஆகிய 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago