உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  தேவபாண்டலத்தில் பல்வேறு வீடுகளில் மின் மோட்டார் திருட்டு

 தேவபாண்டலத்தில் பல்வேறு வீடுகளில் மின் மோட்டார் திருட்டு

சங்கராபுரம்: தேவபாண்டலத்தில் பல்வேறு வீடுகளில் மின் மோட்டார் திருடுபோனது குறித்து போலீசார் விசாரணை செய்துவருகின்றனர். சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தை சேர்ந்த அன்பழகன், மணிகண்டன், சுப்ரமணியன், ஐயப்பன், கண்ணன் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் வீடுகளில் இருந்த மின் மோட்டார் நேற்று முன்தினம் இரவு திருடு போனது. மின் மோட்டாரை திருடிய மர்ம நபர் மின் மோட்டார்களை சாக்கு பையில் மூட்டையாக கட்டி, தலையில் சுமந்து செல்லும் சிசிடிவி காட்சி, சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருவது, இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தேவபாண்டலத்தை சேர்ந்த அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் வழக்குப் பதிந்து மின் மோட்டார் திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி