உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  கல்லை தமிழ் சங்க செந்தமிழ் கருத்தரங்கம்

 கல்லை தமிழ் சங்க செந்தமிழ் கருத்தரங்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கல்லை தமிழ் சங்கத்தின் செந்தமிழ் கருத்தரங்கம் நடந்தது. கள்ளக்குறிச்சி கல்லை தமிழ் சங்கம், தமிழ் வழக்கல்வி இயக்கம் இணைந்து செந்தமிழ் கருத்தரங்கம் நடத்தினர். கல்லை தமிழ் சங்க தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். தென்னாற்காடு மாவட்ட தமிழ் கவிஞர் மன்ற தலைவர் ஆசுகவி ஆராவமுதன், பவுனாம்பாள்-மாரிமுத்து கல்வி அறக்கட்டளை தலைவர் முத்தமிழ்முத்தன், நல்லாசிரியர் சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சண்முகம் வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அறிவழகன் திருக்குறள் உரையாற்றினார். தொடர்ந்து புலவர் ஜெயராமன், பகுத்தறிவு இலக்கிய மன்ற தலைவர் டாக்டர் உதயகுமார், தமிழ் வழிக்கல்வி இயக்க தலைவர் சின்னப்பதமிழர், சங்கராபுரம் திருக்குறள் பேரவை செயலளர் லட்சுமிபதி, பொறியாளர் ஜெயப்பிரகாஷ், அம்பேத்கார் ஆகியோர் செந்தமிழ் கவியரங்கம் நடத்தினர். துணை செயலாளர் முத்துசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ