உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வருவாய்த் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

வருவாய்த் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள டி.ஆர்.ஓ., அலுவலகம் முன், நடந்த போராட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் ராஜா தலைமை தாங்கினார். இணை செயலாளர் பாலமுருகன் வரவேற்றார்.இதில் துணை தாசில்தார் பட்டியல் திருத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்புக்கு அரசாணை வெளியிட வேண்டும். இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்திருத்த ஆணையை வெளியிட வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.அனைத்த வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை தாசில்தார் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையினை வலியுறுத்தினர். இதில் வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் பலர் பங்கேற்றனர்.

திருக்கோவிலுார்

திருக்கோவிலுார் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட பொருளாளர் தவமணி தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.மத்திய செயற்குழு உறுப்பினர் சிட்டிபாபு, மாவட்ட இணை செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தனர். சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். வட்ட செயலாளர் அருள் பிரகாசம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை