உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அட்சய திருதியை முன்னிட்டு நகை கடையில் மக்கள் கூட்டம்

அட்சய திருதியை முன்னிட்டு நகை கடையில் மக்கள் கூட்டம்

காஞ்சிபுரம்,:சித்திரை மாதத்தில், அமாவாசைக்கு பின் வரும் திருதியை நாள், அட்சய திருதியை அன அழைக்கப்படுகிறது. இந்நாளில் தங்க நகை வாங்கினால், அந்த ஆண்டு முழுதும் வீட்டில் செல்வம் பெருகுவதோடு, ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.இதனால், தங்க நகை வாங்கும் அளவிற்கு வசதி இல்லாதவர்கள் கூட குண்டுமணி தங்கமாவது வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.அதன்படி, அட்சய திருதியை நாளான நேற்று, காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல நகை கடைகள் மட்டுமின்றி, சிறிய நகை கடைகளிலும் வாடிக்கையாளர்கள் கூட்டத்தை காண முடிந்தது.காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தினர் தங்களது பொருளாதார நிலைமைக்கு ஏற்ப, தங்களுக்கு பிடித்த தங்க நகைகளை வாங்கிச் சென்று, வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட்டனர்.குடும்ப சூழல் காரணமாக தங்க நகை வாங்க இயலாதவர்கள், ஆண்டு முழுதும் வீட்டில் உணவுக்கு பஞ்சம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், மளிகை கடைகளில் கல் உப்பு, மஞ்சள், குங்குமம், அரிசி, உப்பு உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றனர். இதனால், நகை கடைகளிலும், மளிகை கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காண முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை