உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஊராட்சி தலைவர்களின் மொபைல் எண்களை சேகரிக்கும் அ.தி.மு.க.,

ஊராட்சி தலைவர்களின் மொபைல் எண்களை சேகரிக்கும் அ.தி.மு.க.,

திருப்போரூர்:தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்., 19ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் ஆணையம் சார்பில் அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.வேட்பாளர்கள் தரப்பில், மக்களிடம் ஓட்டு சேகரிக்கும் பணியும் மற்றொரு புறம் நடந்து வருகிறது. சமூக வலைதளங்களிலும் அந்தந்த கட்சி சார்பில் ஆதரவு திரட்டப்படுகிறது.அந்த வகையில், அ.தி.மு.க., சார்பில், காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் அடங்கிய ஒவ்வொரு ஒன்றியத்திலும், ஊராட்சி தலைவர்களின் மொபைல் போன் எண்கள் சேகரிக்கப்படுகின்றன. இதற்காக, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தெரிந்த முக்கிய நபர்கள் வாயிலாக, ஊராட்சி தலைவர்களின் மொபைல் போன் எண் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.ஊராட்சி தலைவர்களிடம் தங்களுக்கு ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.அதேபோல், அ.தி.மு.க., சார்பில், ஒரு மாதத்திற்கு முன் மறைமுக கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டதாகவும், எதிர்பார்த்த அளவிற்கு கூட்டணி அமையாததால், கருத்துக்கணிப்பு முடிவுகள் குழப்பத்தில் இருப்பதாகவும் அ.தி.மு.க., பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை