உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

காஞ்சிபுரம்:தேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பில், டென்சிங்க் நோர்கே தேசிய சாகச விருதுக்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.நீர், நிலம், மலை போன்ற சாகச துறைகளில் இளைஞர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும், அவர்களின் திறமைகளை ஊக்குவிக்கவும், டென்சிங்க் நோர்கே தேசிய சாகச விருது வழங்கப்படுகிறது.இதற்கான விண்ணப்பங்கள், ஜூன் 14 வரை, http://awards.gov.in என்ற இணையதளத்தில் வரவேற்கப்படுகின்றன. நீர், நிலம், காற்று ஆகியவற்றில் தொடர்ச்சியான சாதனைகள் செய்த ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை