உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி பட்டு பூங்காவை பார்வையிட்ட ஆஸ்திரேலிய அதிகாரிகள்

காஞ்சி பட்டு பூங்காவை பார்வையிட்ட ஆஸ்திரேலிய அதிகாரிகள்

காஞ்சிபுரம்:ஆஸ்திரேலியா நாட்டின் பொருளாதார பிரிவு முதன்மை செயலர் ஜோய்வுட்லி தலைமையில், அந்நாட்டின் துாதரக அதிகாரிகள் காஞ்சிபுரம் பட்டு பூங்காவை நேற்று பார்வையிட்டனர்.காஞ்சிபுரத்தில் பட்டு புடவைகள் உற்பத்தி செய்யப்படும் தொழில் நுட்பங்கள், பட்டுப்பூங்காவால் கிடைத்துள்ள வேலைவாய்ப்பு, வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள், பட்டு சேலைகளின் தரம் ஆகியன குறித்து, பட்டுப்பூங்காவின் தலைவர் டி.சுந்தர்கணேஷ், ஆஸ்திரேலியா குழுவினர் விளக்கிக் கூறினார்.ஆஸ்திரேலியாவில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகளை காஞ்சிபுரத்தில் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்தும் பட்டுப்பூங்காவின் செயல் இயக்குனர் பி.ராமநாதனிடம் கலந்துரையாடினர். அப்போது பட்டுப்பூங்கா இயக்குனர்கள், வடிவமைப்பாளர்கள் பலரும் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை