| ADDED : மே 04, 2024 10:11 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ராஜகுளத்தில், 'இன்போடெக் டிரான்ஸ்பார்மர்' என்ற தனியார் கம்பெனி இயங்கி வருகிறது. தனியார் கம்பெனி முன், பல்வேறு கோரிக்கை முன்வைத்து, ஊழியர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.நேற்று முன் தினம் பகலில் குளிக்க சென்ற, திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, 45, என்பவர் நீரில் மூழ்கினார். தீயணைப்பு வீரர்கள் மற்றும் காஞ்சி தாலுகா போலீசார் தேடியும், அவர் கிடைக்கவில்லை.இந்நிலையில், நேற்று, காலை 10:00 மணி அளவில், நீரில் மூழ்கி இறந்த சுந்தரமூர்த்தி உடலை, தாலுகா போலீசார் மீட்டனர். பிரேதப் பரிசோதனைக்கு பின், சுந்தரமூர்த்தியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.