உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இரும்பு கழிவுகள் பயன்படுத்தி மாதிரி கடற்கரை கோவில்

இரும்பு கழிவுகள் பயன்படுத்தி மாதிரி கடற்கரை கோவில்

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், இரும்பு தகடு, கம்பி உள்ளிட்ட கழிவுகளைப் பயன்படுத்தி, கடற்கரை கோவில் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.'ஹேண்ட் இன் ஹேண்ட்' என்ற தன்னார்வ நிறுவனம், நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாக பகுதிகளில், மட்கும் மற்றும் மட்காத குப்பையை சேகரித்து, திடக்கழிவு மேலாண்மையை செயல்படுத்தி வருகிறது. பொருட்கள் மறுசுழற்சி குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.மாமல்லபுரத்தில் நீண்டகாலமாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்திய இந்நிறுவனம், இரும்பு கழிவுப் பொருட்களில் மாமல்லபுரம் கடற்கரை கோவிலை உருவாக்கி, கடற்கரை கோவில் நுழைவாயிலில் பயணியர் பார்வைக்கு வைத்துள்ளது.இதுகுறித்து, நிறுவனத்தினர் கூறியதாவது:இரும்பு தகடுகள், கம்பிகளின் கழிவுகளை பயன்படுத்தி, கழிவுப்பொருளில் கலை என்ற நோக்கத்துடன், கடற்கரை கோவில் மாதிரியை உருவாக்கினோம்.கழிவில் கலை பற்றி பயணியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, தொல்லியல் துறையிடம் அனுமதி பெற்று, கடற்கரை கோவில் நுழைவாயிலில் காட்சிக்கு வைத்துள்ளோம்.இரும்பு கழிவுகளில் செய்தது, அதற்காக பயன்படுத்திய பொருட்கள், எடை விபரங்கள் குறித்து தகவல் பலகையும் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை