உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பேரூராட்சி உதவியாளர் ஓய்வு நாளில் சஸ்பெண்ட்

பேரூராட்சி உதவியாளர் ஓய்வு நாளில் சஸ்பெண்ட்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பேரூராட்சியில், இளநிலை உதவியாளராக நடேசன், 60, என்பவர் பணியாற்றி வந்தார். சொந்த ஊரான உத்திரமேரூர் பேரூராட்சியிலேயே, 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார்.பேரூராட்சியில் இவரது ஆதிக்கம் அதிகளவில் இருந்தது. பணி காலத்தில், நிர்வாக குளறுபடி காரணமாக, இவர் மீது குற்ற குறிப்பாணை நிலுவையில் உள்ளது.இந்நிலையில், ஏப்., 30ல், இவர் பணி ஓய்வு பெற்றார். குற்ற குறிப்பாணை நிலுவையில் உள்ள காரணத்தால், பணி ஓய்வு நாளில், நடேசனை பணியிடை நீக்கம் செய்து, பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை