உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

பெரும்பாக்கம் : பெரும்பாக்கம், எழில் நகர், பிளாக் 39ல் வசிப்பவர் சேகர், 30. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், இரு வீட்டார் சம்மதத்துடன், நேற்று காலை திருமணம் நடக்க இருந்தது.இதுகுறித்து, காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று காலை தகவல் வந்தது. இதையடுத்து பெரும்பாக்கம் போலீசார் அங்கு சென்று, திருமணத்தை நிறுத்தி, சிறுமியை மீட்டனர். பின் மாவட்ட குழந்தைகள் நல காப்பக அதிகாரிகள் வந்து, சிறுமியை காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனர்.சிறுமியின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால், திருமணம் நடத்த முடிவு செய்ததாக, பெற்றோர் தெரிவித்தனர்.இதையடுத்து மாப்பிள்ளை சேகர் மற்றும் இரு வீட்டார் உறவினர்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை