உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் உறவினர்கள் மறியல்

காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் உறவினர்கள் மறியல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மனைவி ரேவதி, முத்தியால்பேட்டை அரசு பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். தன் குடும்பத்தாருடன், கோவைக்கு சுற்றுலா சென்று, காஞ்சிபுரத்திற்கு நேற்று, காலை 8:20 மணி அளவில், ரயிலில் திரும்பி உள்ளார்.காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் வந்து இறங்கும் போது, அதே ரயில் நிலையத்தில் காத்திருந்த சென்னைக்கு செல்லும் பயணியர் வேகமாக ரயிலில் ஏற முயன்றதால், சண்முகம் குடும்பத்தினர் ரயில் நடைமேடையில் விழுந்து விட்டனர்.கீழே விழுந்தவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைக் கண்டித்து, ரேவதி குடும்பத்தினரின் உறவினர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.இதையடுத்து, ரயில்வே போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை