| ADDED : மே 23, 2024 11:21 PM
சென்னை, உலக பல்கலைகளுக்கு இடையிலான பீச் போட்டிகள், பிரேசிலின் உள்ள ஜெனிரோவில், செப்., 2ல் துவங்கி, 9ம் தேதி வரை நடக்கின்றன. இதில் பீச் வாலிபால், மல்யுத்தம் உள்ளிட்ட பலவித கடற்கரை போட்டிகள் நடக்க உள்ளன.இப்போட்டியில், இந்திய பல்கலை வீரர்களுக்கான தேர்வு போட்டிகள், எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலை உள்ள உத்தண்டி கடற்கரையில் நடக்கின்றன. முதல் நாளான நேற்று முன்தினம், பீச் வாலிபால் தேர்வு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், 50க்கு மேற்பட்டோர் பங்கேற்று, 10 வீரர் -வீராங்கனையர் தேர்வு செய்யப்பட்டனர். நேற்று, இந்திய பல்கலை அணிக்கான மல்யுத்த வீரர்கள் தேர்வு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், நாடு முழுதும் உள்ள பல்வேறு பல்கலையில் இருந்து, 50க்கு மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் தேர்வு செய்யப்படும் 10 வீரர்கள், உலக போட்டியில் இந்திய பல்கலை சார்பில் பங்கேற்கின்றனர்.