உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / த.மா.கா., சார்பில் விவசாயிகளுக்கு நல உதவி

த.மா.கா., சார்பில் விவசாயிகளுக்கு நல உதவி

காஞ்சிபுரம்: த.மா.கா., நிறுவனத் தலைவர் மூப்பனாரின் 93வது பிறந்த நாள் விழா, விவசாயிகளின் தினமாக காஞ்சிபுரம் அடுத்த விஷார் கிராமத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட த.மா.கா., தலைவர் மலையூர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். சென்னை மண்டல விவசாய அணி தலைவர் பாபு முன்னிலை வகித்தார்.இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன், பாரம்பரிய விவசாயிகளுக்கு பசுமை காப்பாளர் விருது மற்றும் கேடயம் வழங்கினார்.மேலும், விவசாயிகளுக்கான வேளாண் உபகரணங்கள், விழாவில் பங்கேற்றவர்களுக்கு தென்னங்கன்று மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கி சிறப்புரையாற்றினார்.முன்னதாக விஷார் தாமரை குளக்கரையில் 1,000 பனை விதைகளையும், விவசாய நிலத்தில் விவசாயிகளுடன் இணைந்து நெல் நாற்று நடவு செய்தார்.விழாவில், மாநில இளைஞர் அணி பொது செயலர் சங்கர், காஞ்சி புரம் மாநகராட்சி கவுன்சிலர் மவுலி சசிகுமார், கீழ் ஒட்டிவாக்கம் ஊராட்சி துணைத் தலைவர் யுவகுமார், மாணவர் அணி தலைவர் யுவராஜ் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.விஷார் ஊராட்சி தலைவர் கார்த்தி வரவேற்றார். நகர தலைவர் சுகுமார் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட த.மா.கா., மற்றும் சென்னை மண்டல விவசாய அணியினர் செய்திருந்தானர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை