உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

பூந்தமல்லி : சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்தவர் சண்முகம், 28; தனியார் நிறுவன ஊழியர். இவர், தன் தோழி நந்தினி, 22, என்பவருடன், நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில், பூந்தமல்லி-- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, பூந்தமல்லி அருகே, செம்பரம்பாக்கத்தில் பின்னால் வந்த லாரி மோதியது. இதில், இருவரும் விழுந்ததில் நந்தினி மீது லாரி ஏறி இறங்கியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சண்முகம் காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, லாரி ஓட்டுனர் சுரேஷ், 28, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை