உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  நீர்வழி மதகை அடைத்த தனிநபரால் கழிவுநீர் தேக்கம் கோனேரிக்குப்பம் ஊராட்சி மக்கள் கலெக்டரிடம் புகார்

 நீர்வழி மதகை அடைத்த தனிநபரால் கழிவுநீர் தேக்கம் கோனேரிக்குப்பம் ஊராட்சி மக்கள் கலெக்டரிடம் புகார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள மாமல்லன் நகரில், நீர்வழி மதகை ஆக்கிரமித்து கான்கிரீட் போட்டு தனிநபர் அடைத்து வைத்திருப்பதாக, பகுதி மக்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர். மனுவில் கூறியிருப்பதாவது: கோனேரிக்குப்பம் ஊராட்சி, மாமல்லன் நகரில் உள்ள கே.டி.எஸ்., மணி தெருவில், 40 ஆண்டு களுக்கு மேலாக நாங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் இரு மாதங்களாக பெய்யும் மழை காரணமாக, வீடுகள், கால்வாய்கள் என அனைத்து பகுதியிலும் கழிவுநீர் தேங்குவதோடு துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தி மையமாகவும் எங்கள் பகுதி மாறிவிட்டது. இதற்கு, மழைநீர் வெளியேற முடியாத வகையில், பொது பயன்பாட்டில் உள்ள நீர்வழி மதகை கான்கிரீட் கொண்டு தனிநபர் அடைத்துள்ளார். சட்டவிரோதமாக அ.தி.மு.க., கொடி கம்பத்தை நட்டும், அராஜகம் செய்கிறார். நீர்வழி மதகை அடைத்துள்ளதால், மழைநீரில், வீடுகள் மூழ்கும் அபாயம் உள்ளது. வீட்டு சுவர்கள் இரண்டு மாதங்களாக தண்ணீரில் ஊறுவதால், இடிந்து விழும் நிலையில் உள்ளன. மழைநீர் வெளியேறாத வகையில் தனிநபர் அடைத்து வைத்துள்ள கால்வாய் மதகை சீர்படுத்தி, கான்கிரீட் அடைப்பை நீக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை