| ADDED : செப் 08, 2011 12:06 AM
காஞ்சிபுரம் : பாலாற்றில் மணல் திருடிய, எட்டு லாரிகள் மற்றும் நான்கு மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.திருமுக்கூடல் அருகே பாலாற்றில், மணல் திருட்டு அதிக அளவில் நடைபெறுவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்முன்தினம் காலை 4 மணிக்கு, சாலவாக்கம் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பாலாற்றில் மணல் திருடிக் கொண்டிருந்தவர்கள் லாரியை விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். அங்கிருந்த எட்டு லாரிகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல் புளியம்பாக்கம் கிராமம் அருகே, வாலாஜாபாத் போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் முனுசாமி தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். மாட்டு வண்டியில் மணல் திருடிய, புளியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரன்,55, தமிழ்மணி,56, ஐமிச்சேரி கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம்,40, கோவளமேடு கிராமத்தை சேர்ந்த முருகன்,45, ஆகியோரை கைது செய்தனர். நான்கு மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.