மேலும் செய்திகள்
21 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
11 minutes ago
மானாம்பதியில் நுாலக கட்டடம் புதுப்பிப்பு
13 minutes ago
அங்கன்வாடி செல்லும் பாதை மண் கொட்டி சீரமைப்பு
14 minutes ago
சென்னை: கோவையில் நடந்த பி.எஸ்.ஜி., கோப்பைக்கான மாநில கூடைப்பந்து போட்டியில், பொன்னேரி வேலம்மாள் இன்டர்நேஷனல் பள்ளி அணி முதலிடம் பிடித்து, சாம்பியன் பட்டம் வென்றது. கோவையில் உள்ள பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளி சார்பில், மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி, பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், பல மாவட்டங்களைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. போட்டி, 'நாக் அவுட் கம் லீக்' முறையில் நடந்தது. நாக் அவுட் சுற்று முடிவில், தேனி எஸ்.டி.ஏ.டி., மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வேலம்மாள் இன்டர்நேஷனல் பள்ளிகள், லீக் போட்டிக்கு தகுதி பெற்றன. அதேபோல், சென்னை ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா மற்றும் முகப்பேர் வேலம்மாள் பள்ளிகளும் லீக் போட்டிக்கு தகுதியடைந்தன. லீக் சுற்றில் அசத்திய பொன்னேரி வேலம்மாள் இன்டர்நேஷனல் பள்ளி அணி, தன் கடைசி லீக் ஆட்டத்தில் ஆலப்பாக்கம் வேலம்மாள் பள்ளி அணியை எதிர்கொண்டது. இதில் வெற்றி பெற்ற பொன்னேரி வேலம்மாள் இன்டர்நேஷனல் பள்ளி, போட்டி பட்டியலில் அதிக புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து, ஒட்டுமொத்த 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது. வெற்றி பெற்ற மாணவர்களையும், அவர்களுக்கு பக்கபலமாக இருந்த பயிற்சியாளர்களையும், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.
11 minutes ago
13 minutes ago
14 minutes ago