உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஒரகடத்தில் 10ம் தேதி தொழில் பயிற்சி முகாம்

ஒரகடத்தில் 10ம் தேதி தொழில் பயிற்சி முகாம்

ஒரகடம் : பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுனர் மேளா திட்டத்தின் கீழ், ஓரகடம், அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில், நாளை மறுதினம், காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, தொழில் பழகுனர் முகாம் நடக்க உள்ளது.மத்திய, மாநில மற்றும் தனியார் தொழில் கூட்டமைப்புகள் இணைந்து நடத்தும் இந்த முகாமில், எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவர்களும், கல்வியில் இடை நின்றவர்களும், ஐ.டி.ஐ., தொழில் கல்வி பயின்றவர்களும் பங்கேற்கலாம்.இதில் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விபரங்கள் அறிய, 044 29894560 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை