மேலும் செய்திகள்
டிரைவர் கொலை: மனைவியின் காதலன் உட்பட 2 பேர் கைது
06-Nov-2025
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மஞ்சாலுமூட்டையைச் சேர்ந்தவர் ரகுவரன் நாயர் 59. நுாறு நாள் வேலைத்திட்ட தொழிலாளி. இவரது மனைவி இறந்து விட்டார்.இவரது மகன் அப்பகுதியைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். முதல் கணவர் மூலம் அந்த பெண்ணுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.தாத்தா என்ற முறையில் ரகுவரன் நாயரிடம் அச்சிறுமி விளையாடுவது வழக்கம். இதை பயன்படுத்தி சிறுமியை மடியில் எடுத்து வைத்து கொஞ்சும் அவர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது பல நாட்கள் சிறுமி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து அருமனை போலீசில் புகார் செய்யப்பட்டது. பின் விசாரணை மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டு போக்சோ சட்டத்தில் ரகுவரன் நாயர் கைது செய்யப்பட்டார்.
06-Nov-2025