உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / வெயில் தாக்கம் அதிகரிப்பு மலையில் வெடித்தது பாறை

வெயில் தாக்கம் அதிகரிப்பு மலையில் வெடித்தது பாறை

நாகர்கோவில்,:கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. பகலில் மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்த்து வருகின்றனர். 'ஒகி' புயலில் சாய்ந்த மரங்களுக்கும், கன்னியாகுமரி - திருவனந்தபுரம் நான்கு வழிச்சாலைக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கும் பதிலாக புதிதாக மரங்கள் வளர்க்கப்படவில்லை. இதனால் பசுமை நிறைந்த மாவட்டம் தற்போது வறண்ட பூமியாகக் காணப்படுகிறது.இந்நிலையில், மலையோரமான பத்து காணி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் காலை திடீரென பாறைகள் வெடிப்பது போன்ற பயங்கர சத்தம் எழுந்தது. தொடர்ந்து பெரிய பாறாங்கற்கள் உருண்டு கீழே வந்துள்ளன. வந்த வேகத்தில் பல துண்டுகளாக உடைந்து, புகை மண்டலம் எழுந்தது.இதை துாரத்தில் வசிக்கும் மக்கள் பார்த்து அதிர்ச்சியுற்றனர். மாவட்ட வன அதிகாரி பிரசாந்த் கூறியதாவது:பாறை உருண்டு விழுந்ததால், புகை மண்டலம் எழுந்தது. அப்பகுதியை வனத்துறையினர் பார்வையிட்டனர். மக்கள் வசிக்காத வெறும் மலைப்பகுதி அது. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. வெப்பத்தால் பாறை உடைந்து விழுந்ததா அல்லது வேறு காரணமா என விசாரிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை