மேலும் செய்திகள்
டிரைவர் கொலை: மனைவியின் காதலன் உட்பட 2 பேர் கைது
1 hour(s) ago
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே இரையுமன் துறையைச் சேர்ந்தவர் சாந்தன் மகள் சினேகா, 20; அப்பகுதியில் உள்ள கல்லுாரியில் பி.எஸ்சி., படித்து விட்டு, மேற்படிப்புக்காக தயாராகிக் கொண்டிருந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சினேகா உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார்.கல்லுாரியில் படித்துக் கொண்டிருந்த போது அவரது நெருங்கிய தோழியான சக மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளார். அந்த சம்பவத்திலிருந்து சினேகா மன வருத்தத்துடன் காணப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட கவலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதாக நித்திரவிளை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
1 hour(s) ago