உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குப்பை எரிப்பதை தடுக்க வேண்டும்

குப்பை எரிப்பதை தடுக்க வேண்டும்

கரூர் : கரூர் அருகே, தான்தோன்றிமலை சாலையில் குப்பை சேகரிப்பு தொட்டி இல்லாததால், பொது மக்கள் குப்பைகளை சாலை-யோரம் கொட்டி வருகின்றனர். அந்த குப்பையில், நாள்தோறும் சிலர் தீ வைத்து விடுகின்றனர். இதனால், தான்தோன்றிமலை சாலை புகை மண்டலமாக உள்ளது. அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதை, கரூர் மாநகராட்சி நிர்வாகம் கண்டு-கொள்ளாமல் இருப்பதால், ஆஸ்துமா நோயாளிகள் மூச்சுத்திணறல் காரணமாக கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை