| ADDED : ஜூலை 20, 2024 02:25 AM
கரூர்;கரூர் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு, நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம் மற்றும் ஜே.சி.ஐ., கரூர் டைமண்ட் சார்பில், இயற்கை வேளாண் திருவிழா, கொங்கு திருமண மண்டபத்தில் நாளை (21ல்) நடக்கிறது.அதில், 1,600 நெல் ரகங்கள், 200க்கும் மேற்பட்ட காய்கறி, பழ வகைகள், விதைகள் கண்காட்சி நடக்கிறது. 100க்கும் மேற்பட்ட இயற்கை அங்காடிகள் இடம் பெறுகிறது. 15க்கும் மேற்பட்ட துறை சார் வல்லுனர்கள் கண்கா ட்சியில் பேசுகின்றனர்.வேளாண் திருவிழாவில் பங்கேற்கும் பொது மக்களுக்கு உணவு மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. காலை, 9:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது. அனுமதி இலவசம்.இயற்கை வேளாண் திருவிழாவையொட்டி, நேற்று மாலை கொங்கு திருமண மண்டபத்தில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் உருவம் பொறித்த லோகோ வெளியிடப்பட்டது.