உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முரண்பாடுகளின் மொத்த உருவம் தி.மு.க., கூட்டணி பிரசாரத்தில் நடிகை விந்தியா கிண்டல்

முரண்பாடுகளின் மொத்த உருவம் தி.மு.க., கூட்டணி பிரசாரத்தில் நடிகை விந்தியா கிண்டல்

கரூர்:''தி.மு.க., கூட்டணி முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளது,'' என, அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணை செயலாளரும், நடிகையுமான விந்தியா பேசினார்.கரூர் அருகே, வெங்கமேட்டில் கரூர் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து, நடிகை விந்தியா பேசியதாவது:கடந்த லோக்சபா தேர்தலில், கரூர் தொகுதியில் வெற்றி பெற்ற ஜோதிமணி, நான்கரை ஆண்டுகளாக தொகுதி பக்கம் வரவில்லை. இதுதான் ஜோதிமணியின் சாதனை. கரூரில் காங்., கட்சியை ஜோதிமணி, தி.மு.க.,விடம் விற்று விட்டார். மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில், தி.மு.க., வறுத்தெடுத்த கட்சிகள் தான், தற்போது அவர்களுடன் உள்ளனர். தி.மு.க., கூட்டணி கட்சிகள் இடையே, ஒருமித்த கருத்து இல்லாமல், முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியின் திட்டங்களை, தி.மு.க., அரசு நிறுத்தி விட்டது. இதனால், பெண்கள் தி.மு.க., அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். அந்த கோபம் தான், வரும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு வெற்றியை தேடி தரும்.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட, அ.தி.மு.க., செயலாளர் விஜயபாஸ்கர், அவைத்தலைவர் திருவிகா, ஜெ., பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், கரூர் பஞ்., யூனியன் தலைவர் பாலமுருகன் உள்பட பலர் உடனிருந்தனர். இதேபோல், கிருஷ்ணராயபுரம் கடைவீதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை