உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அ.தி.மு.க., - ஐ.டி., பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை

அ.தி.மு.க., - ஐ.டி., பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை

கரூர்: கரூர் மாவட்ட அ.தி.மு.க., தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.அதில், வரும் சட்டசபை தேர்தலில் தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகளின் பணிகள், கடந்த, 2021 ல் வெளியான, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து, பொதுமக்களிடம் பிரசாரம் செய்தல், பூத் கமிட்டி செயல்பாடு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்தில், ஈரோடு மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கவின்ராஜ், துணைத்தலைவர் பசுபதி செந்தில், கரூர் மாவட்ட செயலாளர் சிவராஜ், கரூர், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியை சேர்ந்த தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை