உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குகை வழிப்பாதை சேதம் வாகன ஓட்டிகள் அவதி

குகை வழிப்பாதை சேதம் வாகன ஓட்டிகள் அவதி

கரூர்: கரூர் அருகே, வெங்கமேடு பெரியகுளத்துப்பா-ளையம், கரூர் டவுன் எம்.ஜி., சாலையை இணைக்கும் ரயில்வே குகை வழிப்பாதை வழி-யாக தினமும், நுாற்றுக்கும் மேற்பட்ட வாக-னங்கள் சென்று வருகின்றன. இந்த ரயில்வே குகை வழிப்பாதை கட்டப்பட்-டுள்ள பகுதியில், அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால் செல்கிறது. ரயில்வே குகை வழிப்-பாதையில் ஊற்றெடுத்து தண்ணீர் தேங்கியுள்-ளது. குகை வழிப்பா-தையில் நடந்து கூட செல்ல முடியாமல், பொதுமக்கள் அவதிப்ப-டுகின்றனர். குகைவழிபாதையில் சாலை சேதமடைந்துள்-ளது. அதில், சிமென்ட் பெயர்ந்து கான்கிரீட் கம்பி வெளியில் தெரிகிறது. இதனால், வாகன ஓட்டிகள் செல்லும் போது, நிலை தடுமாறி விழுகின்றனர். எனவே, பெரிய குளத்துப்பாளையம் ரயில்வே குகை வழிப்பா-தையில், தேங்கியுள்ள ஊற்று நீரை அகற்றி, சேதமான சாலை சீரமைக்க கரூர் மாநகராட்சி நிர்-வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை