| ADDED : நவ 20, 2025 02:03 AM
கரூர், கரூர் வட்டாரத்தில் மரவள்ளி, வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெகன் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் வட்டார பகுதிகளில் மரவள்ளி கிழங்கு, வாழை ஆகிவற்றிக்கு பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தில், காப்பீடு செய்வதன் மூலம் மழை மற்றும் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் சேதத்திற்கு நிவாரணம் பெறலாம். மண்மங்கலம், புகழூர் பகுதியில் மரவள்ளி கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள், ஒரு ஹெக்டேர் பயிருக்கு காப்பீடாக, 4,903 ரூபாய் பிரீமியம் தொகை செலுத்த வேண்டும்.புகழூர் வாங்கல் பகுதியை சேர்ந்த வாழை விவசாயிகள் ஒரு ஹெக்டேர் வாழை பயிருக்கு, 4,863.50 ரூபாய் பிரீமியம் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாழை, மரவள்ளி கிழங்கிற்கு பிரீமியம் தொகை செலுத்த 2026 பிப்., 28 கடைசி நாளாகும். எனவே, விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் பொது சேவை மையத்தில், தங்கள் பயிர்களுக்கான காப்பீட்டு தொகையை செலுத்தலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.