உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தெய்வ திருமண விழாவில் முறைகேடு; கலெக்டரிடம் பா.ஜ., மனு வழங்கல்

தெய்வ திருமண விழாவில் முறைகேடு; கலெக்டரிடம் பா.ஜ., மனு வழங்கல்

கரூர்: கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நால்வர் தெய்வ திரு-மண விழா ரசீது வழங்காமல், வசூலில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை நடத்தவில்லை என, பா.ஜ., கரூர் மாவட்ட செயற்-குழு உறுப்பினர் செந்தில், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.அதில், கூறியிருப்பதாவது: ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களின் விழாக்களை, தனிநபர் அல்-லது தனிப்பட்ட அமைப்பு கொண்ட குழுக்கள் அமைத்து, விழாக்கள் நடத்தக் கூடாது என, மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இதை மீறி கடந்த ஆண்டு, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள நால்வர் அரங்கில், தனியார் அமைப்பு சார்பில் தெய்வ திருமண விழா மூன்று நாட்களாக நடந்தது.வளாகத்தில் நன்கொடை வசூல் செய்தனர். ஆனால் அதற்கு ரசீது வழங்கவில்லை. இது தவிர, சில்வர் பாத்திரத்தில் மஞ்சள் துணியை கட்டியும் வசூல் செய்தனர். இது தொடர்பாக, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தோம். ஓராண்டாகியும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்-வாகம் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி