உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / க.பரமத்தி அருகே புதிய நுாலக கட்டடம் திறப்பு

க.பரமத்தி அருகே புதிய நுாலக கட்டடம் திறப்பு

அரவக்குறிச்சி: வாசிப்புத் திறன் மேம்பாட்டிற்கு முக்கிய முயற்-சியாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம், அரவக்குறிச்சி சட்டசபை தொகு-திக்குட்பட்ட வளையபாளையம் பகுதியில், புதிய நுாலக கட்டடத்தை துவக்கி வைத்தார்.அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட, க.பரமத்தி அருகே உள்ள அத்திப்பாளையம் ஊராட்சி, வளையபாளையம் பகுதியில் அமைக்-கப்பட்டுள்ள புதிய நுாலக கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.அரவக்குறிச்சி தி.மு.க.,- எம்.எல்.ஏ., இளங்கோ குத்து விளக்கேற்றி, விழாவை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் க.பரமத்தி வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கார்த்திக் உள்பட அதிகா-ரிகள் கலந்து கொண்டனர்.பொதுமக்கள், மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில், அமைக்கப்பட்ட புதிய நுாலக கட்டடம், இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்த நுாலகம் மாணவர்கள், போட்டித் தேர்வு க-ளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைந்துள்-ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை