உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நிர்ணயம் செய்த ஊதியம் கேட்டு மனு

ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நிர்ணயம் செய்த ஊதியம் கேட்டு மனு

கரூர்: மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ள, 716 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆதி தமிழர் பேரவையினர் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது: மாநகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில், துாய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை, மாவட்ட தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் வழங்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு காப்பீடு, மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும். ஒப்பந்த பணி முறை ரத்து செய்து, நிரந்தர பணியாளர்கள் வழங்க நடவடிக்கை தேவை. மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ள, 716 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை