உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இரட்டை குவளை முறை ஒழிக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு

இரட்டை குவளை முறை ஒழிக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு

கரூர்: அரவக்குறிச்சி அருகில், இரட்டை குவளை முறையை ஒழிக்க வேண்டும் என, மக்கள் கலை இலக்கியம் கழக மாவட்ட பொருளாளர் ரமேஷ் தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது: அரவக்குறிச்சி தாலுகாவிற்குட்பட்ட தும்பிவாடி கிராமத்தை சுற்றி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டியல் பிரிவினர் வசித்து வருகின்றனர். தும்பிவாடி கடை வீதிகளில் உள்ள சலுான்களில், பட்டியல் பிரிவினருக்கு முடி திருத்தம் செய்வது கிடையாது. அங்குள்ள டீக்கடைகளில் இரட்டை குவளை முறை பின்பற்றப்படுகிறது. அது குறித்து கேட்டால், அப்படி தான் வேறு, வேறு டம்ளரிலும் டீ தருவோம். விருப்பம் இருந்தால் டீ குடி என்று பதில் வருகிறது. எங்கும் இரட்டை குவளை முறையை இல்லை என்று, தமிழக அரசு கூறி வருகிறது. சாதி அடிப்படையில் இரட்டை குவளை முறையில் இருக்கிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி