உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரயில்வே குகை வழிப்பாதை தரைத்தளம் சேதத்தால் அவதி

ரயில்வே குகை வழிப்பாதை தரைத்தளம் சேதத்தால் அவதி

கரூர், கரூர் அருகே, ரயில்வே குகை வழிப்பாதை தரைத்தளம், இரும்பு கம்பிகள் நீட்டிய நிலையில் சேதமடைந்துள்ளது.கரூர் அருகே பெரிய குளத்துப்பாளையம், கரூர் டவுன் எம்.ஜி., சாலையை இணைக்கும் வகையில், ஈரோடு ரயில்வே வழித்தடத்தில் குகை வழிப்பாதை கட்டப்பட்டுள்ளது. அதை பொதுமக்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கரூர் டவுன் பகுதியில் இருந்து, பெரிய குளத்துப்பாளையத்துக்கு செல்லும் தரைத்தளம் சேதம் அடைந்துள்ளது. இரும்பு கம்பிகள் நீட்டிய நிலையில் உள்ளதால், குகை வழிப்பாதையில் செல்ல முடியாமல், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.எனவே, பெரிய குளத்துப்பாளையம் ரயில்வே குகை வழிப்பாதையில், சேதம் அடைந்துள்ள, தரைத்தளத்தை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை